தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2 ம் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில் முள்ளக்காடு பகுதி – 2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஆறுமுகமங்கலம் கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில் பரமன்குறிச்சி கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் நெடுங்குளம் கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில்; முடுக்குமீண்டான்பட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில்; மாதலாபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்திலும், ஓட்;டப்பிடாரம் வட்டத்தில்; ஜெகவீரபாண்டியாபுரம் கிராமத்திலும் இ கயத்தார் வட்டத்தில் தெற்குவண்டானம்; கிராமத்திலும் 02.02.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் தி;ட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால்; நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.