2016-17 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த உளுந்து விவசாயிகளுக்கு ரூ.86.52 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-17ல் நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்த 1960 விவசாயிகளுக்கு ரூ.2.923 கோடியும், மக்காச்சோளப் பயிருக்கு 19849 விவசாயிகளுக்கு ரூ.64 கோடியும், பாசிப் பயிருக்கு 9895 விவசாயிகளுக்கு ரூ.20.731 கோடியும், மிளகாய் பயிர் காப்பீடு செய்த 8494 விவசாயிகளுக்கு ரூ.32.604 கோடியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனத்தில் இருந்து நேரடியாகவும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது உளுந்து பயிருக்கு ரூ.86.52 கோடி 30970 விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் என். வெங்கடேஸ் தெரிவித்துள்ளார்.