தூத்துக்குடி மாவட்டக் கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை (Mustering) பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கும் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டக் கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை (Mustering) பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கும் அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2018 முதல் ஜுன் மாதம் 2018 வரை நேர்காணலுக்கு ஆஜராகி பதிவு செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில நேரில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்து அதன் மூலம் நேர்காணல் செய்ய கடந்தாண்டு முதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- நேரில் வருபவர்கள்:
இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண் (PAN ), குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு எண்(Core Banking Account No) சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை (PPO No) குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும் போது ஓய்வூதிய புத்தகம் கொண்டுவர வேண்டும்.
- நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்:
அ). நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண் , குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் சமர்ப்பிக்கவில்லை எனில் அதன் நகல் போன்ற ஆவணங்களுடன் வாழ்வுச்சான்றினை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்பப்பட வேண்டும். வாழ்வுச் சான்றினை (www.tn.gov.in/karuvoolam/என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்தகைய வாழ்வு சான்று படிவத்தினை:
- ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர்(அல்லது)
- அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்(அல்லது)
- வட்டாட்சியர்/துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
அனைத்து நகல்களிலும் ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை (PPழு ழே) குறிப்பிட்டு ஒய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆ. வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்:
வெளிநாட்டிலுள்ள மாஜிஸ்திரேட், நோட்டரி பப்ளிக், வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச்சான்று (டுகைந ஊநசவகைiஉயவந) பெற்று, சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் ஓய்வூதிய புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண், சமர்ப்பிக்கவில்லை எனில் அதன் நகல் போன்ற ஆவணங்களுடன் வாழ்வுச்சான்றினை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்பப்பட வேண்டும். வாழ்வு சான்றினை (www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து, இணையதள வழி சேவையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது ” Jeevan Praman” www.jeevanpramaan.gov.in என்ற இணையதளம் வழியாக ஓய்வூதியரின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, ஓய்வூதியர் தங்களது வாழ்வுச் சான்றினை இணையதளம் மூலமாகவே பதிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் ஓய்வூதியர்களும்/குடும்ப ஓய்வூதியர்களும் ஆதார் எண் பெற்று கருவூலத்திலும், Jeevan Praman Portal-லிலும் பதிவு செய்திருந்தால் வாழ்வு சான்றை இணையதளம் மூலமே பெற்றுக்கொள்ளலாம்.
III மற்ற விபரங்கள்:
குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள்/நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி(இருப்பின்) ஆகிய விபரங்களையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IV ஓய்வூதிய நிறுத்தம்:
ஓய்வூதியர்கள் ஏப்ரல் மாதம் 2018 முதல் ஜுன் மாதம் 2018 வரை நேர்காணலுக்கு வரத்தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றினை அனுப்பத் தவறினாலோ ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு மாதம் 2018 முதல் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
V இணையதள முகவரி :
வாழ்வுச் சான்றினை www.tn.gov.in/karuvoolam/என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
VI புதிய ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டம்:
இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.