தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட உள்ள நிகழ்ச்சிகளின் விவரத்தை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் மளவராயநத்தம் கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் மின்னொளி கபடி போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. மார்ச் 1–ந்தேதி அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி, மாநகராட்சி 8 வட்டங்களில், நகராட்சியில் கட்சி கொடியேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 3–ந்தேதி மதியம் 12 மணிக்கு திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் மாவட்ட கழகம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு சாத்தான்குளம் சாமிசன்னதி பகுதியில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
10–ந்தேதி காலை 8 மணிக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாமும், மாலை 6 மணிக்கு காயல்பட்டினத்தில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட முகாம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதே போல் ஏரலில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
11–ந்தேதி மாலை 6 மணிக்கு பேய்க்குளத்தில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. 17–ந்தேதி மாலை 6 மணிக்கு உடன்குடி பாரதி திடலில் நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 18–ந்தேதி காலை 6 மணிக்கு திருச்செந்தூர் தேரடி திடலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.
ஏப்ரல் 7–ந்தேதி மாலை 6மணிக்கு திருச்செந்தூர் தேரடிதிடலில் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், 8–ந்தேதி மாலை 6 மணிக்கு ஓட்டப்பிடாரத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. அதே போல் ஓட்டப்பிடாரத்தில் கபடி போட்டியும், ஸ்ரீவைகுண்டத்தில் ரேக்லா போட்டியும், கருங்குளம் வசவப்பபுரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.