
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் காவலர்களால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பெருவணிக நகரமான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலில் இன்று வணிகர்கள் பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க கடை அடைப்பு நடத்தப்பட்டது. இதனால் ஏரலில் உள்ள 600க்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. இதனால் பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.