தாமிரபரணி மஹா புஷ்கரம் நடைபெறுவதை முன்னிட்டு முக்கானி, முறப்பநாடு, திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல் ஆகிய பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி மஹா புஷ்கரம் நடைபெறுவதை முன்னிட்டு முக்கானி, முறப்பநாடு, திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல் ஆகிய பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தாமிரபரணி மஹா புஷ்கர விழாவிற்கு பொது மக்கள் அதிகளவில் முக்கானி, முறப்பநாடு, திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், ஆகிய இடங்களுக்கு வருகைதர உள்ளதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இப்பகுதிகளில் உள்ள உள்ளுர் மக்களின் ஒத்துழைப்புடன், பொதுப்பணித்துறை அலுவலர்கள் இணைந்து, தாமிரபரணி மஹா புஷ்கர விழாவினை சிறப்பாக நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளபப்படும். மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வந்தது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 15க்கு பிறகு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 முக்கியமான கால்வாய்களிலும் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் மூலம் 53 குளங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டோம். இது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் இன்று ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகம், பெண்கள் மருத்துவ பிரிவு, ஆண்கள் மருத்துவ பிரிவு, சித்தா மருத்துவம், மருந்தகம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்விது, சார் ஆட்சியர் பிரசாந்த் அண்ணா பல்கலைக்கழகம் (திருநெல்வேலி மண்டல அலுவலகம்) முதல்வர் ஜி.சத்யநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொறி.ஆர்.சொர்ணகுமார், திருவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன், செயல் அலுவலர் (திருவைகுண்டம்) ரெங்கசாமி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.சுந்தரி, உதவி பொறியாளர் பொறி.ரகுநாதன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, பானு, சுடலை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.