தாமிரபரணி கரை நாகரீகம் வெளிவர கல்லூரி மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என தூத்துக்குடி காமராஜர் கல்லூரி கருத்தரங்கில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வரலாற்ற துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். மாணவி செல்வபிரியா வரவேற்றார். நிகழ்ச்சியை வரலாற்று துறை தலைவர் டாக்டர் தேவராஜ் தொகுத்து வழங்கினார். மாணவி துர்கா சிறப்பு விருந்தினர் அறிமுகவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு தாமிரபரணி மற்றும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் களம் என்ற தலைப்பில் பேசினார்.
அவர் பேசும் போது தாமிரபரணி கரை நாகரீகம் வெளிவர கல்லூரி மாணவர்கள் முயற்சி செய்யவேண்டும். நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தாமிரபரணி கரையிலும் தகவல்கள் கொட்டி கிடக்கிறது. பழங்கால தமிழர்களின் தொல்லியல் சின்னம் உள்ளது. அந்தந்த ஊரில் உள்ள வரலாற்று துறை மாணவர்கள் அவற்றை ஆவணப்படுத்த வேண்டும். இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டால் மிகவும் தொன்மையான தமிழரின் பெருமை வெளிவரும் என்று அவர் பேசினார்.
உதவி பேராசிரியர்கள் சுப்பிரமணியன், ரகு ஜெகதீஸ்வரி, பெருமாள், பிர்லா, கருப்பையா, மணிகண்டன், மாணவர் சந்தனகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். உதவி பேராசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.