தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா புஷ்கரம் திருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் துவங்குகிறது. இதற்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் கரையில் உள்ள படித்துறையில் ஆற்றிற்கு ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சாரதா கல்லூரி தாளாளர் பக்தானந்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதி. கங்கைக்கு பின் புண்ணியமாக போற்றப்படும் நதி தாமிரபரணி. இந்த நதியில் 144 ஆண்டுக்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகாபுஷ்கரம் திருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் துவங்கி 12 நாட்கள் சிறப்பா நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தர இருக்கிறார்கள். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த 30 ஆயிரம் பேர் களமிறங்க உள்ளார்கள் என தெரிவித்துள்ளனர். நாட்கள் குறைவாகவே உள்ள காரணத்தால் தாமிரபரணி கரையில் உள்ள அந்தந்த கிராம மக்கள் தாமிரபரணி நதியை தூய்மை செய்ய முன்வர வேண்டும். விரைவில் தாமிரபரணி நதியை தூய்மை செய்ய வேண்டும். தாமிரபரணி நதி அனைவருக்கும் தாய். இந்த நதியை முழுவதுமாக நாம் தான் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆற்றில் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது. அனைத்து மதத்தினரும் ஒன்று கூடி சாதி மத பேதமின்றி இந்த மகாபுஷ்கர திருவிழாவை பொங்கல் திருநாளைப்போல் நடத்த வேண்டும். என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழா ஒருங்கிணைப்புகுழு தலைவர் நல்லபெருமாள், ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தலைவர் காளியப்பன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கத்தினர் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


