வற்றாத தாமிரபரணி நதி பொதிகைமலையில் உற்பத்தியாகி பல உப நதிளுடன்இணைந்து புன்னக்காயலில்சங்கமாகிறது.இதற்கிடையில் நதியில் பலஅணைக்கட்டுகள் உருவாக்கப்பட்டு அதிலிருந்து பல கால்வாய்கள் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் நேரடிக் கால்வாய்கள் மூலம்பாசனமும், கால்வாய் வழியாகநீர் ,குளத்திற்கு அனுப்பப்பட்டுகுளங்கள் வழியாக பாசனமும்நடைபெற்று வருகிறது. நதியில்
உள்ள மொத்த 8 அணைக்கட்டுகள் மற்றும் 11 கால்வாய்களுள், கீழ்கண்ட 7 அணைகளும்9 கால்வாய்களும் பழங்காலஅரசர்களால் தாமிரபரணி நதி யின் குறுக்கே கட்டப்பட்டுள்ளனஎன்பது பெருமைக்குரியதாகும்.காரணம் இது நம் பழங்காலதமிழர்களின் நீர் மேலாண் மைக்கு எடுத்துக்காட்டாகும்.நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுக்கள் அவ்வளவும்ராட்சத , செதுக்கப்பட்ட கற்களை கொண்டு கட்டப்பட்ட அணைக்கட்டுக்களாகும். பெரிய கற்களை தூக்க பயன்படும் கிரேன், JCP போன்ற நவீன கருவிகள்இல்லாத அக்காலத்தில், தூக்கமுடியாத அவ்வளவு பெரிய கற்களைக் கொண்டு எப்படி கட்டினார்கள் என்பது ஆச்சரியமே. இதை நேரில் கண்டால்தான்உணரமுடியும். பல வெள்ளங்
களை தாமிரபரணிகண்டபோதும் எந்த விரிசல்களும் ,பிளவுமின்றிஅவ்வளவு அணைகளும்கம்பீரமாக இன்றுவரை இருப்பதுநம் கட்டிடக்கலைக்கு சிறந்தஎடுத்துக்காட்டாகும். இவைகள்அவ்வப்போது புரணமைக்கப்படவேண்டும்.முக்காலஅரசர்கள் *தாமிரபரணி
நதியின் குறுக்கே கட்டிய அணைக்கட்டுகள்
1. கோடைமேலழகியன் அணைக்கட்டு (பாபநாசம் தலையணை)இதிலிருந்து இரண்டு கால்வாய்கள் அமைக்பட்டுள்ளன.
தெற்கு கோடை மேலழகியன்
கால்வாய்நேரடிப் பாசனம் 1935 ஏக்கர்குளம் மூலம் பாசனம் 325 ஏக்
2. வடக்கு கோடை மேலழகியன்கால்வாய்நேரடிப் பாசனம் 870 ஏக்கர்குளம் மூலம் = இல்லை2. நதியுண்ணி அணைக்கட்டுஆலடியூர் பாலத்திற்கு மேற்கில் உள்ளது. கூட்டு குடிநீர்திட்டம் மூலம் இங்கிருந்துஅனேக கிராம, நகர்புறங்
களுக்கு குடிதண்ணீர்
கொண்டு செல்லப்படுகிறது.
3..நதியுண்ணிக்கால்வாய்
நேரடிப் பாசனம் 2460 ஏக்கர்
குளம் மூலம் = இல்லை
3. கன்னடியன் அணைக்கட்டு
கல்லிடைகுறிச்சிக்கு மேற்கில்
மணித்தாறும், தாமிரபரணி
ஆறு சேருமிடத்தில் உள்ளது
4. கன்னடியன் கல்வாய்
நேரடி பாசனம் = 10334 ஏக்கர்
குளம் மூலம் = 2166 ஏக்கர்
4. அரியநாயகிபுரம் அணைக்கட்டு
(முக்கூடலுக்கு கிழக்கில்)
5. கோடகன் கால்வாய்
நேரடி பாசனம் = 3000 ஏக்கர்
குளம் மூலம் பாசனம் =3000ஏக்
5. பழவூர் அணைக்கட்டு
(பழவூர் பகுதியில்)
6.பாளையம் கால்வாய்
நேரடி பாசனம் = 6200 ஏக்கர்
குளம்மூலம்பாசனம் 3300 ஏக்
6. சுத்தமல்லி அணைக்கட்டு
(சுத்தமல்லி பகுதியில்)
7. திருநெல்வேலி கால்வாய்
நேரடி பாசனம் 2525 ஏக்கர்
குளம்மூலம்பாசனம் 3885 ஏக்
7. மருதூர் அணைக்கட்டு
8. மருதூர் கீழக்கால்வாய்
நேரடி பாசனம் 2970 ஏக்கர்
குளம்மூலம்பாசனம் 4815
9. மருதூர் மேலக்கால்வாய்
நேரடி பாசனம் 4554 ஏக்கர்
குளம்மூலம்பாசனம் 8208 ஏக்
மேற்கண்ட அணைக்கட்டுகளும்
கால்வாய்களும் அதன்மூலம்
பயன்பெறும் குளங்களும் , ஆங்
கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன் நம் பழங்கால அரசர்களால்
கட்டப்பட்டது என்பது பெருமைக்
குரிய சிறப்பு அம்சமாகும். இதில் இப்பகுதிகளின் மானாவாரிக்
குளங்கள் சேராது. அக்கால அரசர்கள் மதிநுட்பத்துடன் பாப
நாசம் முதல் மருதூர் வரை தாமிர
பரணி நதியின் நீரை வீணாக்கா
மல் மேற்கண்ட கால்வாய்களின்
துணையுடன் பெரும்பகுதியான
நிலப்பரப்பினை விவசாயத்
திற்கு உட்படுத்தி, இருபோக
நஞ்சை வயல்களாய் ஆக்கி உள்
ளனர். அதோடு இந்த நிலங்கள்
மூலம் விவசாயம் மற்றும் உணவு
உற்பத்தியில் மேலோங்கி, யாரி டமும் உணவுக்காக கை ஏந்தாத நிலையை நம் முன்னோர்கள்
உருவாக்கி உள்ளனர்.
அதன் அருமை பெருமை
தெரியாமல் நாம் ,மனம் போன
போக்கில் நஞ்சை வயல்களை
வீட்டுமனைகளாக்கி வருவது
வேதனைக்குரியதே.
ஆங்கிலேயர் கட்டிய அணை
8. ஸ்ரீவைகுண்டம்அணை கட்டு
(ஸ்ரீவைகுண்டம் பகுதியில்)
10. வடகால்
நேரடி பாசனம் 3289 ஏக்கர்
குளம்மூலம்பாசனம் 9511 ஏக்
11. தென்கால்வாய்
நேரடி பாசனம் 2693 ஏக்கர்
குளம் மூலம்பாசனம்10067ஏக்
ஆக மேற்கண்ட 11 கால்வாய்
மூலம் நேரடியாக
மொத்த பாசனம் = 40830 ஏக்கர்
கால்வாய் வழி (System Tanks)
குளம் மூலம்
மொத்த பாசனம் = 45277 ஏக்கர்
…………..
பெருமொத்தம் = 86107 ஏக்கர்
மேற்கண்ட ஸ்ரீவைகுண்டம்
அணைக்கட்டும் அதன் வழி
இரண்டு கால்வாய்களும் ஆங்கி
லேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்
பட்டவை ஆகும்.
அதோடு இரண்டு கால்வாய் மூலம் பாசனம் பெறும் 90% குளங்
கள் நம் முன்னோர்களால் வெட்
டபட்ட மானாவாரி குளங்கள் ஆகும். பின்னாளில் ஸ்ரீவைகுண்
டம் அணைக்கட்டு கட்டப்பட்டு
வடகால், தென்கால் என பிரித்து
அந்த கால்வாய்களின் மூலம்
குளத்துப்பாசனமாக ஆக்கப்பட்ட
இருபோக நஞ்சை நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமிரபரணி நதி மட்டுமின்றி,
மேற்கண்ட அணைக்கட்டுகள்
கால்வாய்களின் கரைகளிலுள்ள
எண்ணற்ற மரங்கள், தாவரங்கள்
அதை நம்பி இருக்கிற உயிரின
ங்கள் மற்றும் ஆயிரக்கணக்கில்
வகை வகையான பறவைகள்,
தங்குவது, இனபெருக்கம் செய் வது மட்டுமின்றி, பிறநாட்டு
பறவைகள் வலசை வருவது,
பல்லுயிர் பெருக்கத்திற்கு
இன்றியமையாததாய் இருக்கிறது.
ஆக தாமிரபரணி ஆற்றின்
குறுக்கே கட்டபட்ட 8 அணைக
ளும், அதன் வழி 11 கால்வாய்க
ளின்இன்றைய நிலையில் எப்படி
இருக்கிறது.? தூர்வாரப்படா
மல், கரை ஓர ஆக்கிரமிப்பு வீடு
களாய், செங்கசூலைகளால்,
ஆக்கிரமிப்பு தோட்டங்களாய்,
இதரஆக்கிரப்புகளால், வேற்று
தாவர அடைப்பால், கழிவுகளால்,
பிளாஸ்டிக்குப்பைகளால்,
இறைச்சி மாமிச கழிவுகளால்,
மருத்துவக் கழிவுகளால், ஆலை
கழிவுகளால்.பாட்டில்களால் ,
செட்டிக் டேங் கழிவுகள், அதோடு
கால்வாயின் முக்கியத்துவம்
அறியாமல், கரையோரம் திறந்த வெளி கழிவுகளான மலம் ஜலம்
etc கழித்து வருகிறோம்.
காணாத குறையாக வீடுகளில்
சேரும் கிராம, நகர்புற அத்தனை
சாக்கடை ஓடைகளின் புகலிட
மாக இந்த பதினோரு கால்வாய்
களும் இருக்கின்றன. கூடவே
கால்வாய்களில் இறந்த பிராணி
களான நாய் ,பூனை, எலி இவை
களை நாம் போடுவதால் துர்நாற்
றத்துடன் கால்வாய்களின் நீர்
அசுத்தமாக்கப்பட்டு வருகிறது.
தவிர, அமலை செடிகளின் ஆதிக்
க்கம். இந்த 11 கால்வாய்கள் இல்
லாது இருந்தால் மேற்கண்ட கழிவுகள் அவ்வளவும், நேரடி
யாகவே தாமிரபரணி ஆற்றில்
கலந்து , எப்போதே நதி பாழ்பட்டு
போயிருக்கும்.
ஒரு 25 ஆண்டுகளுக்கு முன்
இந்த 11 கால்வாய்களின் நீர்,
குடிக்க மட்டுமின்றி சமயலுக்காக
வும் பயன்பெற்றது. விழா மற்றும்
வீட்டு விசேட காலத்தில் தள்ளு
வண்டி, மாட்டுவண்டிகள் மூலம் தண்ணீரை இந்த வாய்கால்களி ருந்து சுமந்து கொண்டுபோய்
உபயோகித்ததை காணமுடிந்தது.
ஹோட்டல்களுக்கு பெரும்பாலும் இந்த தண்ணிதான் உபயோகம்.
அப்போது , இந்த நீரால் எந்த
வியாதியும் பாதிப்பும் பெரும்பா லும் வந்ததில்லை.
இன்று அப்படிய….?சாக்கடைக
ளின் கழிவு நீரே 60% நேரடியாக
கால்வாய்களில் கலக்கின்றன.
இவைகள் ஒட்டுமொத்தமாக
பல ரூபத்தில் சிறுசிறு ஓடைகள்
மூலம் கடைசியாக தாமிபரணி
ஆற்றில் கலக்கின்றன. இவை
களைதாண்டி தாமிரபரணி ஆறு
பல எண்ணற்ற கழிவுகளை தினமும் சந்திக்கின்றன. பாபநா
சம் முதல் புன்னக்காயல் வரை
இருகரைகளின் வழியாக 424
சிறிய பெரிய ஓடைகள் மூலம் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில்
கலக்கின்றன. இதில் கழிவுநீர்
முதல் எல்லா நீரும் அடங்கும்.
அதோடுஒன்றை குறிப்பிட்டு
ஆகவேண்டும்.இந்த கால்வாய்
கள் மூலம் நேரடிபாசனம் பெறும்
வயல்களிலும், கால்வாய்மூலம்
நீர்பெறும் குளங்களை நம்பிய
வயல்வெளிகளிலும் இந்த ஒட்டு
மொத்த கால்வாய் சாக்கடைகள்
கலந்த நீர்தான் ,நெல், கரும்பு
வாழை, கிழங்கு, மற்றும் காய்கறி
பயிர்களுக்கு பாய்சப்படுகிறது.
ஆக எண்ணற்ற கழிவுகளால்
கால்வாய், குளம், நதி , வயல்
வெளிகள் மாசுபட்ட நீரால் பாதிக்
கப்படுகின்றன. மாசுப்பட்ட இந்
நீரால் நல்ல இருபோகம் விளை
யும் வயல்வெளிகள் மறைமுக மாக மலட்டு தன்மையை அடைந்துவருகிறது. இதன்
விளைவு. பயிர்களின் விளைச்
சல் பாதிப்பு அடைகிறது. அதோடு பாதுகாக்கப்பட வேண்
டிய நஞ்சை நிலங்கள் தரிசு
நிலங்கலாக ஆகக்கப்பட்டு அதில் அடர்ந்த முள்செடிகள்
கோரதாண்டவமாக வளர்ந்து
விடுகின்றன.கூடவே அசல்
நஞ்சை நிலங்கள் வீட்டுமனை
களாக ஆக்கப்படுகிறது. அதோடு
புதிய சாலை வழித்தடங்கள்
போடப்படுவதால் சாலை ஓர
நஞ்சை நிலங்கள் வீட்டுமனை
களாகவும்,தொழிற்சாலைகளாக
ஆக்கப்படுகிறது. இதனால்
ஒட்டுமொத்த நல்ல, இருபோக
நஞ்சை நிலங்களின் பரப்பு
ஆண்டுக்கு 1.5% குறைந்து
போகிறது. இப்படி நஞ்சை ஆயக்
கட்டு குறைந்து கொண்டே
போனால்? உணவுப் பற்றாக்
குறை ஏற்படும் சூழ்நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பதினோரு கால்வாய்களையும்
ஏன் சுத்தம் செய்தாக வேண்டும் ?
தற்போது தாமிரபரணி
நதியை சுத்தம் செய்கிற பணி
அரசு, தன்னார்வலர்கள், அறக்
கட்டளை என பலதரப்பில் நடை
பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்
நிலையில், இந்த பிரதான
11 ( பதினோரு ) கால்வாய்
களையும் சாக்கடை நீர்கலவாமல் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
இதை செய்யாது.தாமிரபணியை
மட்டும் சுத்தம் செய்வதால் ஒரு
பயனும் இல்லை. நதியை மட்டும்
தூய்மை செய்யும் நிலை ஏற்பட்
டால்?தூய்மை செய்த சில காலங்
களில் மீண்டும் 11 கால்வாய்க
ளின் ஒட்டுமொத்த கழிவுகளும்,
தாமிரபரணி நதியை தாக்கக்
தொடங்கி, மீண்டும் நதியை
பயனற்றதாக ஆக்கிடும். அதே
நேரத்தில் கிராம, நகர்புற சாக்
கடைக்கழிவுகள் நேரடியாக தாமிரபரணி நதியில் கலக்கின்
றன. அதோடு இந்த 11 கால்வாய்
களில் உள்ள வெள்ளத்தடுப்பு
மதகுகள் மூலம் பெருவாரியான
நகர, கிராம சாக்கடை கழிவுகள்
இதரக் கழிவுகள் தாமிபரணி நதி
யில் கலக்கின்றன். அதோடு வயல்வெளி இராயனக் கழிவுக
ளும் நதியில் கலக்கின்றன.
இதுமட்டுமின்றி தாமிரபரணி நதியின் உபநதிகளின் கழிவுக
ளும், உபநதிகளில் தடுப்பணை
மூலம் கால்வாய்களின் கிராம
நகர சாக்கடை கழிவுகள் நதியில்
கலக்கின்றன். மட்டுமின்றி காட்
டாற்று ஓடையில் விழும் கழிவு
களும் தாமிரபரணியில் கலக்
கின்றன.
இந்த 11 கால்வாய்களும் நகர,
கிராமபுறங்களை ஒட்டியே செல்
வதால், நகர, கிராமபுற தெரு
ஓடைகளில் சேரும் கழிவுகள்,
சாக்கடைகளை கால்வாய் மற்றும் நதியில் கலக்கவிடாமல்
செய்ய உரிய நடவடிக்கை மேற்
கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு மாற்றுவழி தேடி ஆக
வேண்டும். அதற்கான செயல்
வடிவ திட்டங்கள் நிறைய
உள்ளன. அதை முன்னெடுக்க
வேண்டும். அதோடு நாமும்,
நதிநீர் தூய்மை குறித்து ,அரசு
தரும் வழிமுறைகளை தவறாது
100% பின்பற்ற வேண்டும்.
எனவே குப்பைகள் கழிவு
களை நதியிலும் கால்வாய்களி
லும் நீர்நிலைகளிலும் போடா
மல் இருக்க முன்வரவேண்டும்.
அதற்காகபெருமுயற்சி கொண்டு
அயராது அரசுடன் இணைந்து
தன்னார்வலர்களும்,அறகட்டளை
களும், இயக்கங்களும் , மாணவர்
களும் தினசரி பொதுமக்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குளிக்கும் நீரான தாமிரபரணியை குடிக்கும்
நீராக்க பாடுபடுவோம்.