
The Minister of Commerce & Industries, Sultanate of Oman, Mr. Maqbool Ali Bin Sultan calls on the Union Minister for Communications and Information Technology, Shri Dayanidhi Maran, in New Delhi on September 05, 2006.
தயாநிதி மாறன் . இவர் தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007 வரை பொறுப்பு வகித்தார்.[] பின்னர் இந்தியாவின், நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.
இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான முரசொலி மாறனின் மகன் ஆவார். இவரின் மூத்த சகோதரரான கலாநிதி மாறன், சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரும் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மு.கருணாநிதி ஆவார். இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு பிரியா என்னும் மனைவியும், கரண் மற்றும் திவ்யா என்னும் இரு பிள்ளைகளும் உள்ளனர். இவர் சென்னையில் உள்ள இலயோலாக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் மத்தியில் தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றியபோது, அலைபேசிகளுக்கும் தொலைபேசிகளுக்குமான கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வளர்ச்சி முன்பைவிட பலமடங்கு உயர்ந்தது.[ அடித்தட்டு மக்களுக்கும் அலைபேசிகள் செலவிற்குள் வரவியலும்படியானது.