தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழுக்கூட்டம் ஆறாம்பண்ணை மஸ்ஜிதுன் நூர் மர்க்கஸில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அசாருதீன், பொருளாளர் நாசர், துணைச்செயலாளர்கள் சிக்கந்தர், இமாம்பரீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் தமீம் வரவேற்றார்.
கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபாய் தலைவர் மஹபூப் சுபஹானி, மாநில செயலாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில் மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.