நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி தெற்குமாவட்டத்திற்குட்பட்ட திருவைகுண்டத்தில் செயல்வீரர்கள் கூட்டம் திருவை ஆதித்யா அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்குமாவட்டச் செயலாளர் சுப்பையாபாண்டியன் தலைமை வகித்தார். திருவை தொகுதிச் செயலாளர் பட்டாணி, தொகுதிப்பொருளாளர் முருகானந்தம், உழவர்பாசறைச் செயலாளர் வெள்ளைப்பாண்டி, வீரத்தமிழர் முன்னணி செயலாளர் இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா வியனரசு கலந்து கொண்டார். தொகுதி இணைச்செயலாளர் *சுடலைகண்ணு* வரவேற்புரையாற்றினார்.
வரும் தமிழர் திருநாளான தைபொங்கலை முன்னிட்டு தை 2ஆம் தேதி திருவையில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் மஞ்சுவிரட்டு நடத்துவது, தாமிரபரணி ஆற்றில் இனி எக்காலத்திலும் மணற்குவாரி அமைக்கக்கூடாது மற்றும் தொகுதியின் செயல்பாடுகள், அடுத்தகட்ட நகர்வுகள், மற்றும் கட்டடமைப்பை பலப்படுத்துவது போன்ற முக்கிய செயல்திட்டங்கள் விவாதிக்கப்பட்டு 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் திருவை மத்திய ஒன்றியச் செயலாளர் அந்தோணி, ஆழ்வை ஒன்றியச் செயலாளர் சுடலை, கருங்குளம் ஒன்றியச்செயலாளர் அருண் ஆறுமுகம், திருவை கிழக்குஒன்றியச் செயலாளர் ஜெபசிங், சாத்தை ஒன்றியத்தலைவர் முருகன் , சாத்தை ஒன்றியப் பொருளாளர் ராபின்சன் ,ஆழ்வை ஒன்றிய இணைச் செயலாளர் முத்துக்குமார், தொகுதி இளைஞர் பாசறைச்செயலாளர் ஞான்ராஜ் , தொகுதி துணைத்தலைவர் செபர்சன், தொகுதி மாணவர்பாசறைச் செயலாளர் முத்துக்குமார், தொகுதி இளைஞர்பாசறை துணைச்செயலாளர் ஜேஸ்பர்ராஜ், மற்றும் திருவை நகரச்செயலாளர் வள்ளிநாயகம் உட்பட நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்