மர்மஉறுப்பை அறுத்து இளைஞர் கொடூர காெலை : தட்டார்மடம் போலீஸ் விசாரணை
அரசூர் கிராம காட்டுப்பகுதியில் இளைஞரை இரண்டு பேர் சேர்ந்து கம்பால் தாக்கியும்,கத்தியால் மர்மஉறுப்பை அறுத்தும் காெலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை நல்லதம்பி தெருவில் ஸ்வீட் ஸ்டால் ஒன்று இயங்கி வருகிறது.இங்கு திசையன்விளையை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் முத்துபட்டுராஜா,திசையன்விளை காராம்பாட்டை சேர்ந்த சுபாஷ் (25) ,திசையன்விளையை சேர்ந்த சுரேஷ் (25) ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஸ்வீட்ஸ்டால் உரிமையாளர் சேசுராஜ்,சுபாஷ் மற்றும் சுரேஷை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.
தங்களை வேலையை விட்டு நிறுத்த காரணம் முத்துபட்டுராஜா தான் என்று கருதிய சுபாஷ்,சுரேஷ் ஆகியோர் முத்துபட்டுராஜாவை செல்பாேனில் அழை த்து அரசூர் பஞ்சாயத்துக்குட்பட்ட காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று நேற்று நள்ளிரவு அவரை கம்பால் தாக்கியும்,கத்தியால் மர்மஉறுப்பை அறுத்தும் கொலை செய்து விட்டும் தப்பியோடி விட்டனர்.இது குறித்து அறிந்ததும் தட்டார்மடம் காவல் துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.