சேரகுளம் அருகே இந்திரா நகரில் பட்டபகலில் வீடு புகுந்து நகை துணிகரமாக திருடிய திருடன். போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சேரகுளம் போலிஸ் சரகம் இந்திரா நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மகன் சேவியர் ஜான் பிரிட்டோ (39). இவர் பஜாரில் இந்திரா நகர் ஷாப்பிங் கடை வைத்துள்ளார். நேற்று அவர் திருநெல்வேலி பொருள்கள் வாங்க சென்று விட்டார். அவரது மனைவி பாலம்மாள் (35) ஷாப்பிங்கடையில் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது வீட்டில் அவர்களது மகள் ஜெயந்தி (13) இருந்துள்ளார். அவர் பாத்ரும் சென்ற சமயத்தில் மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து பீரோலில் இருந்த 20 கிராம் தங்க நகையை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்துவிட்டான். வெளியே வந்து பார்த்த ஜெயந்தி பீரோலை திறந்து கிடப்பதையும், பொருள்கள் சிதறி கிடப்பதையும் கண்டு ஓடி போய் கடையில் இருந்து தயாரிடம் சென்று கூறினார். அவர் வந்து பார்த்த போது 20 கிராமம் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து பாலம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சேரகுளம் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகிறார். பட்டபகலில் சேரகுளத்தில் நடந்த இந்த திருட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.