செய்துங்கநல்லூரில் உள்ள பீமா அம்மா மாகீன் அபுபக்கர் ஒலியுல்லா தர்க்காவில் கந்தூரி விழா நடந்தது.
முதல் நாள் பீமா தைக்காவில் இருந்து அரண்மனை கொடி யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலம் புதுதெரு, பள்ளிவாசல் தெரு, சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் ஒலியுல்லா தர்க்கா வழியாக மீண்டும் பீமா தைக்காவை அடைந்தது. பின் அங்கு கொடியேற்றப்பட்டது. இரண்டாம் நாள் காலையில் தப்ரூக் என்னும் நேர்ச்சை வழங்கப்பட்டது. இரவு விளக்கு ராத்திரியில் சிறப்பு வழிபாடு நடந்தது. மூன்றாம் நாள் கொடி இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தைக்கா பொறுப்பாளர் புகாரி, ஜோஸ் நர்சரி பள்ளி நிர்வாகி ஓ.பி.முஸ்தபா, ஜாமத் தலைவர் முகம்மது அலி, டாக்டர் கலீல் ரகுமான், உள்பட பலர் கலந்துகொண்டனர்.


