செய்துங்கநல்லூர் நூலகத்துக்கு கழிவறை வசதி வேண்டும் என்று வாசகர் வட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்துங்கநல்லூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். மணக்கரை போஸ்ட மாஸ்டர் காளிமுத்து, ஓய்வு பெற்ற தபால் காரர் செல்லப்பா, முன்னாள் வார்டு உறுப்பினர் வேம்பு துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் அய்யனார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
செய்துங்கநல்லூர் நூலகத்துக்கு கழிவறை வசதி செய்து தரவேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் புஷ்கர திருவிழா சிறப்பாக நடைபெற உதவிய மாவட்ட ஆட்சி தலைவர் சந்திப் நந்தூரி அவர்களை பாராட்டியும், புளிங்குளத்தினை சேர்ந்த இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரிவுரையாளர் சிவராமன், எழுத்தாளர்
முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் துரைராஜ் நன்றி கூறினார்.