செய்துங்கநல்லூரில் திருவரங்க செல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது.
இதையட்டி முதல் நாள் இரவு அம்மனுக்கு மாக்காப்பு சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது. இரண்டாம் நாள் காலையில் சோமசுந்தர விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. ஊர் சுற்றி ஊர்வலமாக வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. அங்கு சிறப்பு யாகம் நடந்தது. அதன் பின் அபிசேகம் அலங்காரம் நடந்தது. உச்சிகால பூஜை சிறப்பாக நடந்தது. மாலையில் கூர் கூடி மக்கள் பொங்கலிட்டனர். இரவு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் சேனை தலைவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.