செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான தொழுநோய் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். முதலாமாண்டு துறை தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். கருங்குளம் வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், வட்டார சுகாதர மேற்பார்வையாளர் பெரியசாமி ஆகியோர் பேசினர். தொழுநோய் அறிகுறியை கண்டுபிடித்து, ஆரம்ப கால கட்டத்திலேயே அதை குணப்படுத்துவது குறித்தும், டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களிடம் அறிவுறுத்தினர். ஆங்கில விரிவுரையாளர் புஷ்பா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


