
செய்துங்கநல்லூர் செயிண்ட் மேரீஸ் கல்வியல் கல்லூரியில் மலர் கண்காட்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் நிம்மிரென் தலைமை வகித்தார். கல்லூரி தாவரவியல் மாணவிகள் நடத்திய மலர் கண்காட்சியில் 75 வகையான மலர் வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்.சி. நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள், எம்.எம். நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ஜோஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி
அலுவலக மேலாளர் ஜுலியன்ராயன் ஏற்பாடு செய்திருந்தார்.