திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைதை முன்னிட்டு செய்துங்கநல்லூரில் சாலை மறியல் செய்ய முயற்சித்த திமுகவினரிடம் போலிசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து கருங்குளம் ஒன்றிய திமுக வினர் ஒன்றிய செயலாளர் நல்லமுத்து தலைமையில் சாலை மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர்.
அவர்களை செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு வைத்து இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பின் அவர் ஸ்டாலினை விடுதலை செய்து விட்டதாலும், சாலை மறியல் செய்ய அனுமதி இல்லை எனவும் கூறி சாலை மறியல் செய்ய விடாமல் தடுத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்கு பின்பு அவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், பட்டன், மாவட்ட தொழிலாளர் பிரிவு நம்பி, கருங்குளம் சுடலைமணி, முன்னாள் கவுன்சிலர், கோபால், தாமஸ், தனம், சிவாஜி, பட்டுராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.