செய்துங்கநல்லூர் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் உஸ்மான் தலைமை தாங்கினார். கிளை தலைவர் உமர் ஜமான் முன்னிலை வகித்தார். செய்துங்கநல்லூர் காவல் துறை ஆய்வாளர் ராஜ சுந்தர் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமீம் அன்சாரி, ரியாஸ், உபைஸ், ஹாலத், சலீம், சிராஜ், கரீம் உள்படப் பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் நவாஸ் நன்றி கூறினார்.