செய்துங்கநல்லூர் அருகே எஸ்.ஐ.யை தாக்கிய வாலிபரை மற்றொரு வழக்கில் போலிசார் கைது செய்தனர்.
செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சதீஷ். இவர் கடந்த 30ந்தேதி கால்வாய் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு பாதுகாப்புக்கு சென்றார். அங்கு பெண்களை கேலி செய்த ஒரு கும்பலை அவர் தட்டி கேட்டுள்ளார். ஆனால் அந்த கும்பல் சப் இன்ஸ்பெக்டரை சுற்றி வளைத்து தாக்கியது. இதில் அவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பினார்.
இது தொடர்பாக கால்வாய் மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகப்பாண்டி மகன் இசக்கிபாண்டி(22) என்பவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இசக்கிபாண்டி கருங்குளம் வன்னிராஜா கோயில் தெருவைச் சேர்ந்த முத்து மனைவி சுந்தரி (35) என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்யவே இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் விசாரணை நடத்தி இசக்கிபாண்டியை மீண்டும் கைது செய்தார்.