செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. இதில் மாணவர்கள் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் அமலா தலைமை வகித்தார். மாணவி பிரியா கொடியை ஏற்றினார். பின் கலைநிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.