செய்துங்கநல்லூர் அருகே காய்கறிலோடு ஏற்றிச்சென்ற மினி லாரியில் திடீர் தீ விபத்தில் எரிந்தது.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள அரசர் குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பால் துரை மகன் முருகன் (37). இவர் காய்கறி வியாபாரி . இவர்க்கு பாவூர்சத்திரத்தினை சேர்ந்த மணிமுருகன் என்பவருக்குச் சொந்தமான லாரியில் காய்கறி கொண்டு வந்தனர். காய்கறியை இறங்குவதற்காக அரசர் குளம் வந்து விட்டுத் திரும்பிச் சென்றது. வண்டியை அரசர் குளத்தினை சேர்ந்த பிச்ச கண்ணு மகன் மணிமுத்து(54) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் வியாபாரி முருகன், அரசர் குளம் மகன் பழனி மகன் கள்ளவாண்டன் ஆகியோர் உடனிருந்தார். மினிலாரி தாதன்குளம் அருகே வந்தபோது திடீரென்று தீபற்றியது. இதில் முழுவதுமாக எரிந்தது . இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீ வைகுண்டம் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்துங்கநல்லூர் போலி சார் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்துக்குக் காரணம் என்ன விசாரித்து வருகின்றனர்.