செய்துங்கநல்லூர் அருகே மோசமான சமத்துவபுரம் சாலையை சீர் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் ஒன்றியம் வசவப்பபுரம் பஞ்சாயத்து அனவரதநல்லூரில் 1998 ஆம் ஆண்டு சமத்துவ புரம் உருவாக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கொண்ட குடியிருப்பு உருவாக்கப்பட்டது. இங்கு பள்ளி, ரேசன்கடை, அங்கன் வாடி, பொழுதுபோக்கு பூங்கா, போக்குவரத்துஉள்பட அனைத்து வசதியும் செய்து தரப்பட்டது. நெல்லை மாவட்ட கிருஷ்ணபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் சமத்துவபுரம் உள்ள காரணத்தினால் இங்கு ஜனத்தொகை கூடியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குடியிருப்பு பெருகிவிட்டது. அருகியேலேயே பல தொழில் சாலைகள் வந்து விட்டன. மாற்றுதிறனாளிக்கான இல்லமும் இப்பகுதியில் உள்ளது. ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் சமத்துபவுரத்துக்கு அமைத்து கொடுக்கப்பட்ட அனைத்து அடிப்படை வசதியுமே தற்போது இல்லை. இதற்கிடையில் சமத்துவபுரத்துக்கு கிருஷ்ணாபுரத்தில் இருந்து வரும் சாலை மிக மோசமான உள்ளது.
இது குறித்து சமத்துவபுரத்தினை சேர்ந்த கண்ணன் கூறும் போது, எங்கள் ஊருக்கு கிருஷ்ணாபுரத்தில் இருந்து வரும் சாலை மிக மோசமான உள்ளது. இந்த சாலையில் ஆட்டோ கூட வர இயலவில்லை. எங்களுக்கு கல்வி, மருத்துவம் உள்பட அடிப்படை வசதிகளுக்கு நாங்கள நெல்லை மாவட்டத்தினை பெரிதும் நம்பியுள்ளோம். ஆனால் நெல்லை கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையோ மிக மோசமாக உள்ளது. அவசரத்து ஆட்டோவை அழைத்தால் கூட அவர்கள் வர மறுக்கிறார்கள். இங்கிருந்து, ஆழிகுடி, நொச்சிகுளம் செல்லும் பஸ் செல்கிறது. ஆனால் அந்த பேருந்தும் இந்த சாலையில் செல்வதால் பழுதாகி விடுகிறது. இதனால் அடிக்கடி பஸ் வராமல் போய் விடுகிறது. எனவே போர்கால அடிப்படையிடில் இந்த சாலையை சீர்செய்து தரவேண்டும் என அவர் கோரினார்.
மிக மோசமான இந்த சாலையை சீரமைத்துதரவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.