செய்துங்கநல்லூர் அருகே துண்டிக்கப்பட்ட கிராமத்துககு சாலை அமைக்க கனிமொழி எம்.பி.யிடம் கோரிககை விடுககப்பட்டுள்ளது.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிராமம் கிளாக்குளம். இந்த கிராமத்துககு சாலை செல்லும் வழியில் ஆளில்லா ரயில்வே கிராஸ் ரோடு இருந்தது. இதில் சுரங்க பாதை அமைககும் பணி நடந்தது. இந்த பணியின் போது தோண்டப்பட்ட பாதையில் தண்ணீர் நிரம்பி விட்டது. இதனால் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. பணியும் இடையில் விடப்பட்டது. இதனால் இந்த பாதை வழியாக செல்லாமல் இந்த ஊருக்கு ஏற்கனவே புதர் மண்டி கிடக்கும் மங்கம்மாள் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிககை விடப்பட்டிருந்தது. இதற்கிடையில் இந்த சாலையை பிரதமர் திட்டத்தின் கீழ் அமைக்க கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பணிக்கு அனுமதி எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் இந்த ஊர் சார்பாக கண்ணன் என்பவர் கனிமொழி எம்பிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தீவான கிளாக்குளம் கிராமத்து ஆளில்லா ரயில்வே சுரங்க பாதை அமைககும் போது தண்ணீர் தேங்கியதால் கிராமம் முழுவதுமாக துண்டிககப்பட்டது. இதற்கிடையில் மங்கம்மாள் சாலையை சீரமைகக பிரதமர் திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்து அனுப்பி வைககப்பட்டது. ஆனால் இதுவரை எங்களுககு சாலை அமைகக நடவடிககை இல்லை. எனவே அம்மா தலையிட்டு தீவாக உள்ள கிளாககுளம் கிராமத்துககு சாலை வசதி செய்து தரவேண்டுகிறேன்.
என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதற்கான நடவடிககை விரைவில் எடுககப்படும் என இவ்வூர் மககள் நம்பிககை தெரிவித்துள்ளனர்.