செய்துங்கநல்லூர் கிராம சபை கூட்டம் எஸ்.என்.பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பற்றாளர் முருகன் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன் தீர்மானங்களை வாசித்தார். தூத்துககுடி மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இலவச சட்டம் மூலமாக மக்கள் பயன்படும் திட்டங்கள் கூறித்து பேசினார். கிராம மககள் இலவச சட்ட முகாமை பயன்படுத்தி தங்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என அவர் மக்களிடையே பேசினார்.
கிராம சபை கூட்டத்தில் செய்துங்கநல்லூர் சி.பி.எம். கிளைசெயலாளர் ராமசந்திரன் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில்,
செய்துங்கநல்லூரில் உள்ள அனைத்து குக்கிராமங்களில் கழிவு நீர் கால்வாய்கள், பாலித்தீன் கவர் மற்றும் குப்பைகளால் நிரம்பி உள்ளது. மழைகாலத்துக்கு முன்பே இதை சீரமைகக வேண்டும். தெருவில் சுற்றி திரியும் பன்றிகளை ஒழிக்கவேண்டும், முத்தாலங்குறிச்சியில் இருந்து செய்துங்கநல்லூருக்கு குடிதண்ணீர் கொண்டு வரும் தண்ணீர் பைப் அளவை பெரிதாக கூட்டித்தர வேண்டும். செய்துங்கநல்லூரை சுகாதரமான கிராமமாக அறிவிக்க அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கோரியிருந்தார்.
நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியன் செய்துங்கநல்லூரில் கழிவு நீர் சேரும் இடங்கள், சாக்கடை கலக்கும் இடங்கள், சந்தை பகுதியில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்துங்கநல்லூரை சுகாதாரமான கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.