
செய்துங்கநல்லூரில் 60 அணிகள் மோதும் மின்னொளி கபாடி போட்டி துவங்கியது.
செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் சண்முகம் ஸ்போர்ட்ஸ் வழங்கும் 4 ஆம் ஆண்டு இரண்டு நாள் மின்னொளி கபாடி போட்டி நடந்தது.
போட்டிக்கு விவசாய சங்கதலைவர் குமார் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் மாசானம், சுடலைமுத்து, முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை டாக்டர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி துவக்கி வைத்தார். வழக்கறிஞர் தில்லை சிதம்பரம் வரவேற்றார்.
இந்த போட்டியில் 60 அணிகள் மோதுகின்றன. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய போட்டி விடிய விடிய நடந்தது. இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. போட்டியில் முதலில் வெல்லும் எட்டு அணிக்கு பண பரிசும், கோப்பையும் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடி கழக துணைச்செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடுவர்கள் போட்டியை கண்காணித்தனர். இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ஆச்சிமுத்து, சாதுசிவசுப்பிரமணியன், பேச்சிமுத்து என்ற பிரபு, கபாடி போட்டியில் அரசு சார்பில் பயிற்று பெறும் வீரர் சிவா, கொம்மையா, முப்பிடாதி, பட்டுராஜா, அழகுமுத்து, சந்தோஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இரண்டாவது நாளான இன்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் சண்முகம் ஸ்போர்ட்ஸ் அணியினர் மற்றும் தேவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.