செய்துங்கநல்லூர் காவல்நிலையம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை அமலா தலைமை விகித்தார். சப்இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன், ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஸ்டாலின் வரவேற்றார். பேரணி ஆர்.சி பள்ளியில் இருந்து துவங்கியது. பேரணியை ஆய்வாளர் சோமன்ராஜன் துவக்கி வைத்தார். பேரணி செய்துங்கநல்லூர் முக்கிய வீதிகள் வழியாக செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தினை அடைந்தது. அங்கு இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் விழிப்புணர்வு குறிதது பேசினார்.
ஆசிரியை சின்னராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியை சாரதா, சேசு ரத்தினம் உள்பட செய்துங்கநல்லூர் புனித லூசியா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.