செய்துங்கநல்லூரில் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் தலைமை வகித்தார். தேர்தல் தாசில்தார் சங்கரநாயரயணன் முன்னிலை வகித்தார். சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் பேரணியை துவக்கி வைத்தார். கால்நடை ஆஸ்பத்திரி அருகில் துவங்கிய பேரணி செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தினை அடைந்தது. இந்த பேரணியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோஷங்கள் எழுப்பபட்டது.
செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் அய்யனார். செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, வல்லகுளம் ஆனந்த், கல்லூரி கண்காணிப்பளார் கணேசன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுக சேகர், பேராசிரியர் ராகுல், வைத்தியமாநிதி, மாரிராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.