செய்துங்கநல்லூரில் ம.ம.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடந்தது.
கிளை தலைவர் இர்ஷாத் தலைமை வகித்தார். ரியாஸ், அசார், அன்சர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் இம்ரான்கான் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட தலைவர் ஆசார் ஆகியோர் சிறப்புரையாற்றினார். பின்னர் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது.
ம.ம.க அடையாள அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. செய்துங்கநல்லூர் அல் ரகுமான் தெருவில் மின் விளக்கு அமைக்க வேண்டும், கூட்டுறவு வங்கி – கால்நடை ஆஸ்பத்திரி இணைப்பு சாலையை தார் சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர் மோத்தி முஸம்பில், நூர்முஸ்தாக், பிரகான், ஜாவித், அப்சர், முஸ்ரப், ஹாரீஸ், அபு, பைசல், இர்பான், தாசிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


