
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒற்றை சாளர முறையில் நலத்திட்டம் வழங்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடந்தது.
கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் கிரி தலைமை வகித்தார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஜார்ஜ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் 22 அரசு துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை வழங்கல், பேருந்து இலவச பயண அட்டை வழங்கல் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சுமார் 215 மாற்றுதிறனாளில் இந்த நிகழ்ச்சியில் அரசு நலத்திட்டத்துக்கு பதிவு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் ஒன்றிய அலுவலக ஆணையாளர் கிரி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்..