
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். இயந்திரவியல் மூன்றாம் ஆண்டு மாணவர் மரிய டில்சன் வரவேற்றார். பயிற்சியை மதுரை ரயில்வே ஜிம்மிஸ் ஜெபக்குமார், திருச்சி ரயில்வே மாரிமுத்து ஆகியோர் நடத்தினார். மத்திய மாநில அரசில் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என்பது குறித்து வகுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டோ நன்றி கூறினார். நிகழ்ச்சியை சண்முகப் பெருமாள் தொகுத்து வழங்கினார். துறை தலைவர்கள் ஜாய்ஸ்மேரி, ஜான் செண்பக துரை மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் கல்லூரி ஊழியர்கள் செய்திருந்தனர்.