
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து செய்துங்கநல்லூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் 3ம் நாளாக ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நெல்லை திருச்செந்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் செய்துங்கநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.