செய்துங்கநல்லூரில் மது ஒழிப்பு பேரணி நடந்தது.
கால்நடை ஆஸ்பத்திரி முன்பு துவங்கிய நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன் ராஜன், சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி சப் கலெக்டர் பிரசாந்த் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி செய்துங்கநல்லூர் மெயின் ரோட்டு வழியாக காவல்நிலையத்தினை வந்தடைந்தது.
மாவட்ட கலால் அலுவலர் தில்லை பாண்டி, மண்டல துணை தாசில்தார் முருகேசன், ஜஸ்டின், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் அய்யனார், செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, கல்லூரிஅலுவலக கண்காணிப்பாளர் கணேசன், கல்லூரி விரிவுரையாளர் சாகுல் அமீது, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் மது ஒழிப்பு குறித்து கோஷம் எழுப்பப்பட்டது. செய்துங்கநல்லூர் சேவியர்பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் மூன்றாமாண்டு மாணவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.