பாண்டியன் கிராம வங்கி 42 வது துவக்க விழா மற்றும் , மகளிர் விழா செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வரா மகாலில் நடந்தது.
தூத்துக்குடி பாண்டியன் கிராம வங்கி நிதிசார் கல்வி மையம் கார்திகேயன் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் கிரி, சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி மேலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி காசாளர் சுப்பையா வரவேற்றார். வங்கி மண்டல மேலாளர் தெய்வநாயகம், முன்னாள் மண்டல மேலாளர் சுப்பையா, வங்கி மேலாளர் சண்முகநாதன் ஆகியோர் பேசினர். தையல் மிஷின், கேமிரா, கறவை மாடு உள்பட பயனாளிகளுக்கு 7 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மகளிர் தின விழாவை முன்னிட்டு அரவிந்த கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு டாக்டர் சுவேதா தலைமை வகித்து இலவச கண்சிகிக்சை நடத்தினார்.
வங்கி உதவி மேலாளர் கற்பக சுந்தரி நன்றி கூறினார்.