செய்துங்கநல்லூரில்
பொங்கலை முன்னிட்டு
செவ்வாய் மற்றும் புதன்கிழமை சிறப்பு சந்தை நடைபெறும்
செய்துங்கநல்லூரில் பொங்கலை முன்னிட்டு வருகிற செவ்வாய் மற்றும் புதன் கிழமை சிறப்பு சந்தை நடைபெறுகிறது
செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான வாரசந்தை உள்ளது. இந்த சந்தையில் புதன்கிழமை தோறும் கூடுவார்கள். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து பல்வேறு பொருள்களை விற்பனை செய்வார்கள். இந்த சந்தையில் கடந்த வருடத்தில் பொதுமககள் மிக அதிகமாக வர ஆரம்பித்த காரணத்தினால் வியாபாரிகள் எண்ணிக்கை அதிகமானது. இதனால் வியாபாரிகள் நெல்லை திருச்செந்தூர் சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் வைத்தனர். இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் சந்தையை மேம்படுத்தும் பணி துவங்கியது. இதனால் வியாபாரிகள் அனைவருமே சாலைக்கு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. தொடர்ந்து கொரானா காரணமாக கடந்த மார்ச்சு ஏப்ரல் மாதம் சந்தை நடைபெறவில்லை. ஆனாலும் சந்தையை மேம்படுத்தும் பணி தொய்வில்லாமல் நடந்தது. இதில் சமுதாய நலககூடத்தில் உள்ள பகுதியிலும் பேவர் பிளாக் கல் அமைத்தல், வியாபாரிகள் வெயிலில் அமர்ந்து வியாபாரம் செய்யும் இடங்களிலில் மேற்கூரை அமைத்தல், கழிவறை வசதிகளை சீர் செய்தல், சமுதாய நலக்கூடம் உள்பட இடங்களை வெள்ளையடித்தல் போன்ற பணிகள் நடந்தது. கொரானா ஒரளவு கட்டுபாட்டுக்குள் வந்தவுடன் சந்தை மீண்டும் துவங்கியது. Êசந்தைக்குள் வேலை நடைபெற்ற காரணத்தினால் வியபாரிகள் உள்ளே சென்று வியாபாரம் செய்ய இயலவில்லை.. எனவே நடை பாதையிலும் மெயின் ரோட்டிலும் வைத்து வியாபாரம் செய்தனர். வியாபாரிகளின் வரத்து கடந்த 4 வாரத்தில் மிக அதிகமானது. எனவே புதன் கிழமை வந்து விட்டாலே செய்துங்கநல்லூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டது. இதனால் விபத்து ஏற்படும் நிலமை ஏற்பட்டது.
இதற்குள் சந்தை பணி முடிவடைந்தது.
வியாபாரிகளை மீண்டும் சந்தைக்குள் கொண்டு சென்று வியாபாரம் நடத்தி போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் நடவடிக்கை எடுத்தார். இதனால் சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் செல்வி, கூடுதல் ஆணையாளர் பாக்கிய லீலா, பொறியாளர் சித்திரை, விவசாயிகள் சங்க தலைவர் குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட செய்துங்கநல்லூர் முக்கிய பிரமுகர்கள் மூலமாக ஆலாசனை நடந்தது-
கடந்த 6 ந்தேதி முதல் சந்தையை பழைய இடத்துக்குள் கொண்டு செல்லவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின் மீன் மற்றும் கருவாடு வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், பழ வியாபாரிகள், இனிப்பு பண்டங்கள் செய்யும் வியாபாரிகள் உள்பட வியாபாரிகளுக்கு தனிதனி இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களை சந்தைககுள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த வாரம் முதல் மெயின்ரோட்டில் யாரும் கடை வைக்க கூடாது. மீறி யாராவது கடை வைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக சந்தையை உள்ளே கொண்டு செல்ல இயலவில்லை. இதற்கு பல நிர்வாக காரணங்கள் இருந்தது.
இதற்கிடையில் சந்தை ஏலமிடும் பணி நடந்தது. இதில் 16 லட்சத்து 29 ஆயிரத்து மூன்னுற்று இருபது ரூபாய்க்கு சந்தை ஏலமிடப்பட்டது. அதன் படி வருகிற 12 ந்தேதி முதல் சந்தைக்குள் அனைத்து கடைகளையும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் பொங்கலை முன்னிட்டு செவ்வாய், புதன்கிழமை சந்தை நடைபெறவுள்ளது. இந்த தகவலை சந்தை ஒப்பந்தக்காரர் பண்டாரப்பாண்டியன் தெரிவித்தார்.
&&