செய்துங்கநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் புற்று நோய் பரிசோதனை மற்றும் தடுப்பு சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
செய்துங்கநல்லூர் கிராம உதயம் மையத் தலைவி லலிதா தலைமை வகித்தார். கிராம உதயம் மையத்தலைவி வேதபூசெல்வி முன்னிலை வகித்தார். பகுதி பொறுப்பாளர் கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை உதவும் உள்ளங்கள் டாக்டர் சிந்தியா சரோஜா கலந்துகொண்டார். நிர்வாக பொறுப்பாளர் இராமச்சந்திரன், செல்வன் துரை ஆகியோர் பேசினர். விஜய ஏஞ்சல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சென்னை உதவும் உள்ளங்கள், பாளையங்கோட்டை புற்று நோய் தடுப்பு மையம் மற்றும் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் இணைந்து நடத்தியது.


