செய்துங்கநல்லூரில் பஸ் கண்ணாடியை உடைத்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலம் சாமி மனைவி முத்துலட்சுமி(47). மன நலம் பாதிக்கப்பட்டவர். இவர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து செய்துங்க நல்லூருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். புளியங்குளம் விலக்கு அருகில் வரும் போது கீழே கிடந்த கல்லை தூக்கி அங்கு வந்த பஸ் மீது எறிய ஆரம்பித்தார். இதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் முத்து லெட்சுமியை மீட்டு நெல்லை அன்பின் இல்லத்தில் ஒப்படைத்தார். மனநிலை பாதிக்கப்பட்ட பெண் சாலை ஓரத்தில் நின்று வருகின்ற போகின்ற வாகனங்கள் மீது கல்லை தூக்கி எறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.