செய்துங்கநல்லூரில் பஸ் கட்டணத்தினை எதிர்த்து கட்டணமின்றி பயணம் செய்யும் போராட்டம் 2 ந்தேதி நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் பஸ் கட்டண உயர்வு காரணமாக போரட்டம் நடந்து வருகிறது. ஆனால் பஸ் கட்டணத்தினை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. இதற்கிடையில் அரசு டவுண் பஸ்ஸில் தனியார் பஸ்ஸை விட அதிகமாக பணம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
பஸ் கட்டணம் கூடினால் அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஒரே கட்டணம் தான் அதிகரிக்க வேண்டும். ஆனால் தனியார் பஸ்ஸை விட அரசு பஸ்ஸில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுபோல பஸ் கட்டணத்தில் பல குளருபடி உள்ளது. மக்கள் எவ்வளவு போராடியும் பஸ் கட்டணத்தினை குறைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே கருங்குளம் ஒன்றிய த.மா.கா இளைஞரணி சார்பில் செய்துங்கநல்லூரில் அரசு பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து த.மா.கா கருங்குளம் ஒன்றிய இளைஞரணி தலைவர் கரையடியூர் கணேசபாண்டியன் கூறும் போது, பஸ் கட்டணம் கூடியிருப்பது சாதரண கூலி வேலைசெய்யும் தொழிலாளர்களை மிகவும் பாதித்துள்ளது. மேலும் தனியார் பஸ்ஸை விட அரசு பேருந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டனத்துக்குரியது. பஸ் கட்டணத்தினை குறைக்க பல போரட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் அரசு எடுப்பதாக தெரியவில்லை எனவே பொதுமக்களை திரட்டி வருகிற 2ந்தேதி காலை 10 மணிக்கு செய்துங்கநல்லூர் பஸ்நிலையத்தில் அரசு பஸ்களில் மக்களை ஏற்றி கட்டனம் கொடுக்காமல் பயணம் செய்யும் நூதன போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். என்று அவர் கூறினார்.