செய்துங்கநல்லூரில் பழைய பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி விநியோகம் நடந்தது.
ரமலான் நோன்பை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியிக்கு பள்ளி வாசல் தலைவர் சாதிக் தலைமை வகித்தார். நிர்வாகப் பொருளாளர் செய்யது இப்ராகீம், துணை தலைவர் அப்துல்கனி, துணை செயலாளர் கரீம் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தார். மஸ்தான், அப்துல் காதர், ஜாபர், வசீம் முல்லா, சுஹைல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.