செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அல்மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தர்மம் நடந்தது.
பள்ளி வாசல் தலைவர் சாதிக் தலைமை வகித்தார். செயலாளர் வகாப் முன்னிலை வகித்தார். சுமார் 120 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் ரொக்கபணம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் செய்யது இப்ராகீம், துணைச்செயலாளர் கரீம் பாஷா, துணைத்தலைவர் அப்துல் கனி, அப்துல் காதர், சுஹைல், வாசிம் அப்சர், ஜாபர் அலி, ஹாதில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.