செய்துங்கநல்லூரில் நயினார் குலசேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தாமிரபரணி நதி நீர் பாதுகாப்பு பேரவை நிறுவனராக இருந்தவர் நயினார் குலசேகரன். இவர் தாமிரபரணியை பாதுகாக்க கடும் போராட்டம் நடத்தியவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவை செய்து வந்த இவர் கிராம நலக்குழு சார்பாக கிராமபுற பள்ளி மாணவர்களுக்கு வருடந்தோறும் பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவித்து வந்தார். கடந்த வருடம் ஜுலை 30ம் தேதி அவர் இறந்தார். அவரின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் காந்திமதிநாதன் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாநில துணை தலைவர் கஸ்ஸாலி நயினார் குலசேகரன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் அருமைராஜ், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், சங்கிலிராஜ், சரவணன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.