
செய்துங்கநல்லூரில் தொழு நோய் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.
செய்துங்கநல்லூரில் புதன் கிழமை சந்தையையொட்டி அங்கு கூடும் பொதுமக்களுக்கு தொழுநோய் சிறப்பு முகாம் நடந்தது. இதையொட்டி கருங்குளம் வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சண்முக பெருமாள் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அகஸ்தீஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. தொழுநோய் அறிகுறியை கண்டுபிடித்து, ஆரம்ப கால கட்டத்திலேயே அதை குணப்படுத்துவது குறித்து பிரச்சாரம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் பணியாளர்கள் செய்திருந்தனர்.