
செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை துப்புறவு பணியாளர்கள், ஓ.எச்.டி பம்பு ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கருங்குளம் ஒன்றிய தலைவர் இசக்கி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பெருமாள், துணை தலைவர் பொன்னுசாமி, துணை தலைவர் தளவாய், ஒன்றிய துணை செயலாளர் சின்னத்துரை, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுடலை கண்ணு வரவேற்றார். 7வது சம்பள கமிஷன் சம்பளத்தை கருங்குளம் துப்புறவு மற்றும் பம்பு ஆபரேட்டருக்கு வழங்க வேண்டும், சம்பள உயர்வு, பிரதி மாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கல், நிலுவை தொகையை வழங்குதல், உள்பட பல கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாதர் சங்க மாவட்ட தலைவர் குணேஷ்வரி, விவசாயசங்க மாவட்ட துணை தலைவர் அப்பாக்குட்டி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் நேருஜி, வெள்ளச்சாமி உள்பட பலர் பேசினர். சுடலைமாடன், நாராயணன், ரமேஷ், மூக்கம்மாள், பார்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய பொருளாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.