செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக 72 வது சுதந்திர தின தெரு முனை பிரச்சாரம் நடந்தது.
செய்துங்கநல்லூர் பஜாரில் நடந்த இந்த பிரச்சாரத்துக்கு கிளைத் தலைவர் சாதிக் தலைமை வகித்தார். செயலாளர் வகாப் முன்னிலை வகித்தார். சுதந்திரத்தில் இந்தியாவின் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் மாவட்ட செயலாளர் அசார் சிறப்புரையாற்றினார். மஸ்தான், மீரான் செய்யது இப்பராகீம், சுஹைல், துணைத்தலைவர் வாசீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பொருளாளர் அப்துல் கனி நன்றி கூறினார்.