
செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுகுழு கூட்டம் செய்துங்கநல்லூர் வெங்கடேஷ்வரா மகாலில் நடந்தது.
மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சித்திக் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அக்தர் அய்யூப் வரவேற்றார். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆந்திர மாநில தளச்சேறு கிராமத்தில் பள்ளி வாசலிலில் முகம்மது பாருக் என்ற முதியவரை கொலை செய்தவர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாதையில் பயணிக்கிறோம் என்று சொல்கிற எடப்பாடி அரசு முஸ்லிம்களுக்கு இட ஓதுக்கீட்டை உயர்த்தி தரவேண்டும். செய்துங்கநல்லூரில் மூடிகிடக்கும் சித்தா மருத்துவமனையை திறக்க வேண்டும், செய்துங்கநல்லூர் சந்தையை விரிவுபடுத்த வேண்டும், செய்துங்கநல்லூரில் நாய் பன்றிகள் தொல்லைகளை நீக்கவேண்டும், கருங்குளம் & கொங்கராயகுறிச்சி ஆற்று பாலத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்பட பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மீரான், அசார், அபுதாகிர், பரீது, ஹமீது, செய்துங்கநல்லூர் தலைவர் சாதிக், செயலாளர் வஹாப், பொருளாளர் செய்யது இபுராகீம், துணைதலைவர் அப்துல் கனி, துணைசெயலாளர் வாசிம், கரீம்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.