
செய்துங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
பஞ்சாயத்து செயலர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலெட்சுமி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பம்பு ஆபரேட்டர் இசக்கி, சுகாதார பணியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம் செய்திருந்தது.