செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
எல்.கே.ஜி முதல் 10 வது வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் தனித்தனியாக தங்களது திறமையை வளர்க்கும் விதமாக கண்காட்சியை நடத்தினர். இதில் வேதியியல் இயற்பியல், புவியியல், தாவரவியல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கண்காட்சிகளை வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி குறித்து பார்வைக்கு வந்த பொதுமக்களிடம் மாணவர்கள் விளக்கினர்.
இந்த கண்காட்சிக்கு பள்ளி முதல்வர் ஜெய்தூண் பீவி தலைமை வகித்தார். நிர்வாகி ரகுமத் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
சிறந்த கண்காட்சியை பெற்றோர்கள் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.