செய்துங்கநல்லூரில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாரத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர்கள் சுப்பிரமணியன், துரைப்பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப பணி உயர்வு வழங்க வேண்டும், பிற துறைகளில் கல்வி தகுதிக்கேற்ப பணி உயர்வு வழங்கவேண்டும் உள்பட பல கோரிக்கையை நிறைவேற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.